நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதூஷீடம் தொடர்ந்து விசாரணை!

Monday, May 6th, 2019

டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷீடம் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.226 ரக விமானத்தில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட அவர், நேற்று அதிகாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் பொறுப்பேற்றனர்.

இதையடுத்து, அவர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

மாகந்துரே மதுஷ் என அறியப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஷித என்ற அவர், இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: