நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Monday, December 5th, 2016

நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது  நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதான் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற இரவீந்திரதாசன் அங்குவாழும் மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணம் முகமாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமைகளை எடுத்துக்கூறியுள்ளார்.

மேலும்  இங்குவாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான நிரந்தர வீடு இன்மை மற்றும் வீதி புனரமைப்பு ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு தெரியப்படுத்தி தீரவு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20161205_125310

20161205_124331

20161205_124913

Related posts: