‘நாடா’ சூறாவளி யாழ். குடாநாட்டில் மையம்: அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கோருகிறார் !

Thursday, December 1st, 2016

‘நாடா’ சூறாவளியுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களை மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் தொடர்பு கொண்டு வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘நாடா’ சூறாவளி தற்போது யாழ். மாவட்டத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மழைவீழ்ச்சி எதிர்வரும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக நீடிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாடா சூறாவளியுடன் கூடிய காலநிலை காரணமாக மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறைக் கடற்பிராந்தியத்தில் மூன்று மீற்றர் உயரத்துக்குக் கடல் அலை மேலெழும்பும் அபாயம் காணப்படுகிறது. ஆகவே, மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை இன்றும்,நாளையும் தவிர்க்குமாறும் அவர் மீனவர்களைக் கேட்டுள்ளார்.

nada

Related posts: