நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் – ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!

நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்களினதும், ஆய்வாளர்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில், இடம்பெற்ற நாடாளுமன்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிதி தொடர்பான குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழு மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு ஆகியவற்றுக்கு அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக பொது மனுக்கள் தொடர்பான குழு போன்ற பொதுமக்கள் நேரடியாக தொடர்புக்கொள்ளும் குழுக்களின் கூட்டங்களை நாடாளுமன்றத்திற்கு வெளியே ஓரிடத்தில் நடத்துவதற்கான இயலுமை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அறிமுகமாகிறது புதிய முச்சக்கர வண்டி!
இன்று இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம்!
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...
|
|