நாடாளுமன்ற மோதல் குறித்த அறிக்கையை 02 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு நேற்று(12) பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, மோதல் பதிவாகியுள்ள காணொளி பதிவு,நாடாளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களுடன், வெளிநபர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அதிரடி முடிவு - பிரதமர் ரணில் !
உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம் - தீயினால் ஆவணங்களுக்கு சேதம் எதுவும் ...
போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு - தபால் திணைக்களம் தெ...
|
|