நாடாளுமன்ற பேரவை முதல் தடவையாக இன்று மாலை கூடுகிறது!
Wednesday, November 4th, 202020 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட நாடாளுமன்ற பேரவை இன்று (04) முதல் தடவையாக கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நாடாளுமன்ற பேரவை கூடவுள்ளது.
மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
சபாநாயகரின் தலைமையிலான நாடாளுமன்ற பேரவையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
நாடாளுமன்ற பேரவைக்கு பிரதமரின் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பெயரிடப்பட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|