நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.slwpc.org, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இவ்வலைத்தளம் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழு அறை 01 இல் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவும் பங்கேற்றிருந்தார்.
மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவுள்ளன!
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் செயற்படவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட விடுதலை வித்துக்கள் தி...
|
|