நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒரு மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்!

Tuesday, May 30th, 2017

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது.

இந்த சம்பளப் பணத்தை ஓர் நிதியமாக ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதேவிதமாக மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளை கருத்திற் கொண்டு கட்சிப் பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென நுகர்வோரை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது

Related posts: