நாடாளுமன்ற நூலகத்தில் கடந்த வருடம் 330 நூல்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளன – சபாநாயகர் தகவல்!

கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்ற நூலகத்தில் 330 நூல்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, புனைவு சார்ந்த 122 நூல்கள், அரசியல் விஞ்ஞானம் சார்ந்த 94 நூல்கள், சமூகவியல் சார்ந்த 27 நூல்களும் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் பொருளியல் சார்ந்த 11 நூல்கள் விஞ்ஞானம் சார்ந்த ஐந்து நூல்கள், சட்டம் சார்ந்த 4 நூல்கள், தொழில்நுட்பம் சார்ந்த 3 நூல்கள் என்பன பெறப்பட்டுள்ளன.
எனினும், கல்வி சார்ந்த ஒரு நூல் மாத்திரமே நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
விடயம் சார்ந்த உரிய தயார்ப்படுத்தல்கள் இன்மையே பொய், போலி குற்றச்சாட்டுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு - நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல தெரிவிப...
இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை - 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது - மத்திய வங்கி ஆளுநர...
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது - இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்த...
|
|