நாடாளுமன்ற தேர்தல் 2019 – ஆசன ஒதுக்கீடு வெளியானது!

எதிர்வரும் பொது தேர்தலின் போது மவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றுள் கொழும்பில் 19 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், அதுவே அதிக எண்ணிக்கையாகும். குறைந்த உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை 4 ஆகும்.
யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் இருந்து தலா 7 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். நுவரெலியா, புத்தளம் மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து 8 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் இருந்து 10 உறுப்பினர்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும், கண்டி மாவட்டத்தில் இருந்து 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
Related posts:
|
|