நாடாளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை 33 முனைகளில் போட்டி- 3 சுயேட்சைக் குழுக்களின் மனுக்கள் நிராகரிப்பு!

Thursday, March 19th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்று மதியம்(19) 12.30 மணியுடன் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 19 கட்சிகள் மற்றும் 14 சுயேட்சைக் கட்சிகள் உள்ளிட்ட 33 தரப்பினரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக இம்மாதம் 2 ஆம் திகதியன்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடந்த 12 ஆம் திகதிமுதல் இன்று 19 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 பதிவுசெய்யப்பட்ட கட்சிகளும் 17 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன.

குறித்த 36 வேட்புமனுக்களில் மூன்று சுயேட்சை குழுக்களின் வேட்டபுமனுக்கள் தேர்தல் விதிழமுறைகளுக்கு அமையாததன் காரணமாக  இன்று தேர்தல் திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டது.  .

இந்நிலையில் ஏனைய 19 கட்சிகள் மற்றும் 14 சுயேட்சை கட்சிகள் உள்ளிட்ட 33 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல மாவட்டத்திலிருந்து மொத்தமாக 330 வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: