நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய செயற்படுவது பொலிசாரின் பொறுப்பு என்றும், பொலிசார் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு மாத்திரம் இராணுவத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதற்கு இராணுவத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: