நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சுகாதார பரிந்துரைகளை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, June 3rd, 2020

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சுகாதார பரிந்துரைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்க மேலும் ஒரு வார காலம் செல்லும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு அண்மையில் தயாரித்த சுகாதார பரிந்துரைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதில் திருத்தங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைகளுக்கு பொருத்தமான வகையில் பரிந்துரைகளை உருவாக்கும் தேவை காரணமாக அதில் திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் லக்ஷ்மன் கம்லத் தலைமையிலான விசேட மருத்துவ நிபுணர்கள் குழு, சுகாதார பரிந்துரைகளை தயாரிக்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: