நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13 ஆம் தர மாணவர்களுக்காக கடந்த 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவர்களுக்கு மாத்திரம் இந்த விடுமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஏனைய தர மாணவர்களுக்காக பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள்! - அமைச்சர் சஜித்
வைத்தியசாலை உணவகங்களில் ஆரோக்கியமான உணவ கட்டாயம் : இதனைத் தினமும் உறுதி செய்யுமாறு சுகாதார சேவைகள் ப...
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
|
|