நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்!
Monday, June 22nd, 2020நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் குறைந்தபட்சம் அவர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டியினை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கி இந்த வழிகாட்டி அச்சிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த வழிகாட்டுதல்களை அச்சிடுவதற்காக தாம் தயாராகவுள்ளதாக அரசாங்க அச்சகமாக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அதேநேரம் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் அடங்கிய கையேடுகள் 80 வீதம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|