நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவேண்டும் – நாமல் ராஜபக்ச வேண்டுகோள்!

Wednesday, July 22nd, 2020

நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை  இலங்கை தடுக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது –

அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீட்டை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியே நாமல் ராஜபக்ச இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜோபிடென் வெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு எதிராக கடுமையாக செயற்படப்போவதாக தெரிவித்துள்ளார் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று இலங்கை போன்ற வெளிநாட்டு அரசாங்கங்கள் அமெரிக்கா தங்கள் தேர்தல்களில் தலையிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: