நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு!

Tuesday, August 13th, 2019

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவுக்குழுவின் பணிகளை ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த மாதம் 23ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமென்றும் தெரிவுக்குழு தெரிவித்திருந்தது.இருப்பினும் தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 23ஆம் திகதி வரையில் நீடிக்க நேர்ந்துள்ளதாக அதன் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தெரிவுக்குழுவின் அமர்வுகள் மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளன. எனினும் அன்றையதினம் சாட்சியம் வழங்குபவர்கள் தொடர்பாக இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து தாக்குதல்கள் குறித்து ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.


சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழர் படுகொலை!
முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்காவுடனான வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பு இரத்து!
யாழ். வந்த தொடருந்தில் பெண்ணுக்குத் தொல்லை - தொடருந்து ஊழியருக்கு எதிராக முறைப்பாடு!
ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் - சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அறிவிப்பு!
கதிர்காமக் கந்தன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!