நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவாக்க சுவிட்சர்லாந்து உதவி!

Monday, October 31st, 2016

இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப, பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர், சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் தலைவர் கிறிஸ்டா மார்க்வால்டரை சந்தித்துள்ளனர்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற பொறிமுறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் விளக்கியுள்ளனர்.19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கான முனைப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

dcp65643464646