நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்க அழைப்பு!

Tuesday, May 23rd, 2023

எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்கவினால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு அன்றையதினம் இடம்பெறவுள்ளது.

குறித்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களை அதிகபட்சமாக பங்கேற்க வைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: