நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கிர் மக்கார், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த!
7 சிறுவர்கள் உயிரிழப்பு - கல்வி நடவடிக்கைகளை நிறுத்த கல்வி அமைச்சர் உத்தரவு!
ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது - ஜனாதிபதி!
|
|