நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று – குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என பொதுச் செயலாளர் அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்ற துணை செயலகத்தின் ஊழியர் மற்றும் நாடாளுமன்ற வரவேற்பாளரான பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊழியரும் பணிப்பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற துணை செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் உதவி பொதுச்செயலாளர் டிக்கிரி ஜெயதிலக ஆகியோர் பரிசோதிக்கப்பட்டனர்.
இதில் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இருவரும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளை கிருமி நீக்கம் செய்ய நாடாளுமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளை (18), நாளை மறுதினம் (19) மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது. இந்த காலக்கட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்ட நாடாளுமன்ற பொதுச்செயலாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|