நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று கூடியபோதே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன் நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கும் தெரிவித்துள்ளார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் ஒரு வெற்றிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த ரீட் மனுவை கடந்த 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் இன்றையதினம் சபாநாயகர் குறித்த தகவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|