நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவு அதிகரிப்பு!

Tuesday, March 15th, 2016

தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே குறைந்தளவு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்கின்றனர் எனவும் இதனால் கொடுப்பனவுகளை உயர்த்த தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது –

அரச ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்த வேண்டிய அவசியம் காணப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டதனால் கொடுப்பனவு உயர்வு தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

2007ம் ஆண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.

போக்குவரத்து செலவு காகிதாதிகள் அலுவலக வசதிகள் மற்றும் எனைய வசதிகளுக்கான கொடுப்பனவுகள் போதுமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 19ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகரித்துள்ளன.

மாதிவல நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியில் வீடு ஒன்றை வழங்க முடியாத ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் 50000 ரூபா வீட்டுக் கொடுப்பனவு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹொட்டல்களில் அல்லது தனியார் வீடுகளில் தங்கி அமர்வுகளில் பங்கேற்க முடியாத காரணத்தினால் இவ்வாறு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைக் கருத்திற் கொண்டு தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசிக் கட்டண கொடுப்பனவு 40000 ரூபாவிற்கு மேலதிகமாக வைபை மற்றும் இணையத் தொடர்பிற்காக மேலதிகமாக 10000 ரூபா வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற காரியாலயமொன்றை நடத்திச் செல்ல காரியாலய கொடுப்பனவாக 75000 ரூபா வழங்கப்பட உள்ளது எனவும் தெரியவருகின்றது

Related posts: