நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Tuesday, November 29th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்காக 1லட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவு, 2500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஒரு மாதத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் 8 நாட்கள் தொடர்ந்து கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவாக ரூபா 20,000 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 17-1439790303-srilanka-parliament57

Related posts: