நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தகவல்!

Sunday, November 21st, 2021

கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறைந்த வள பயன்பாட்டுடன் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் எந்தவொரு அதிகாரியும் வாகன தொடரணியை பயன்படுத்துவதில்லையெனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக் கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களை பயன்படுத்துவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் அதனை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: