நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க கோவை சட்டமூலம் !

Thursday, August 10th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க கோவையின் இறுதிச் சட்டமூலம், சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்க கோவையின் இறுதிச் சட்டமூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் உள்ளடக்கப்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய இச்சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் இது தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய குழுவொன்றை தாம் நியமித்துள்ளதாகவும்; சபையில் தெரிவித்தார். இக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...
ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம – இலங்கை மத்திய வங்...