நாடாளுமன்ற உறுப்பினரானார் பசில் ராஜபக்ஷ – வெளியானது வர்த்தமானி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்றையதினம் இராஜினாமா செய்திருந்தார்.
அவர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்திருந்ததாக தெரியவந்திருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது பதவி விலகல் கடிதம் நாடாளுமன்றில் இன்றைய தினம் வாசிக்கப்பட்டது.
மேலும், நாடாளுமன்றத்திற்கு பசில் ராஜபக்ச வரவுள்ளதால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயரை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|