நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!

Friday, May 6th, 2022

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த மைக்கல் டி. சில்வா, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.எம்.ஐ. பண்டாரநாயக்க மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) டபிள்யு. பி.பி. பர்னாந்து ஆகியோருக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக திருமதி சாவித்ரி ஐ. பானபொக்க அவர்களை நியமிப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அதற்கு மேலதிகமாக, ஓமான் இராஜ்ஜியத்துக்கான புதிய இலங்கை தூதுவராக அஹமட் லெப்பே சபருல்லாஹ் கான் அவர்களை நியமிப்பதற்கும் துருக்கி குடியரசுக்கான புதிய இலங்கை தூதுவராக திருமதி எஸ்.எச்.யு. திசாநாயக்க அவர்களை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாக தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: