நாடாளுமன்ற ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கவில்ல – பிரதமர்!
Thursday, September 8th, 2016
நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை 5 ஆண்டுகளை விடவும் நீடிப்பதற்கு அரசாங்கமோ அல்லது அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியோ, அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு யோசனைகள் எதையும் முன்வைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (7) பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யானகம்மன்பில்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பதிலளித்த பிரதமர் – ‘அரசியலமைப்புத் தொடர்பான பணிகளை, அரசியலமைப்பு நிர்ணய சபை தான் மேற்கொண்டு வருகிறது. உண்iமையில் அரசாங்கம், அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை. பல்வேறு கட்சிகள் தான், அதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஒருவருக்கான நிறைவேற்று அதிகாரங்களை குறைத்துக் கொண்டிருந்தார். அவர் இன்னும் அதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு தயாராக இருந்த போதும், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தமையால், அதை செய்ய முடிந்திருக்கவில்லை. அந்த அதிகாரங்களை குறைப்பதற்கும் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்கள்.
ஒருவர், ஜனாதிபதியாக 2 தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று அரசியலமைப்பில் வரையறையொன்று விதிக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி 3ஆவது தடவையும் பதவிக்கு வர முயன்றபோது, மக்கள் அதை அனுமதித்திருக்கவில்லை. அதற்காக நீங்கள் இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதேநேரம், புதிய அரசியலமைப்பு, எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு-செலவுத்திட்டத்துக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருப்பதாக உதய கம்மன்பில்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அரசியலமைப்பு தொடர்பான பணி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு உரியது என்று மீண்டும் சுட்டிக்காட்டியதுடன், அமைச்சர் சமரவீர அப்படி தெரிவித்திருக்கவில்லை என்றும் எனினும், அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிப்படுத்தும் குழுவின் அறிக்கையை வரவு – செலவுத்திட்டத்துக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|