நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
Thursday, October 21st, 2021அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அனுந்திக பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபைக்குள் பிரவேசித்த போது , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டனை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பதிலளித்தனர்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி நிலை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தடுப்பூசி வழங்கலை வலுப்படுத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!
இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது -...
|
|