நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி – ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் எனவும் அறிவிப்பு!

Monday, December 13th, 2021

நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என குறித்த வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூல மூன்றாம் மதிப்பீடு சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இத்துடன் குழுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து 2021 நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 10 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல்ஒன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: