நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தவறாது சமூகமளிக்கும் உறுப்பினர்கள்!

Monday, May 15th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளுக்கு வரும் பதிவுப்புத்தகம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட பின்னர், மூன்றில் இரண்டு தொகையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பதிவுப்புத்தகம் கடந்த 3ஆம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 173 பேர் வரை அமர்வுகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய குறைவு ஏற்பட்டதன் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆலோசனையின் பேரில் பதிவுப்புத்தகம், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இதேவேளை, அமைச்சர்கள் உரிய முறையில் அமர்வுகளுக்கு வருவதில்லை என்று மஹிந்த தரப்பினர் அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: