நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவிப்பு!
Friday, September 23rd, 2022கடந்த 20 ஆம் திகதியன்று (20-09-2022) நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார், அத்துடன் பிரதமர், அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம அமைப்பாளர், ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன் ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன, அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த சபையில் செயற்படுவர் என்று சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|