நாடாளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க நடவடிக்கை – ஜனவரி முதல் நடைமுறையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

நாடாளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசைகளில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடதாசிகள் என்பன காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் சபாநாயகருக்கு யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்..
அத்துடன் இந்த நடவடிக்கையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா - தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்...
|
|