நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது – திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022

நாடாளுமன்றம் கடந்த 6ஆம் திகதி இறுதியாக கூடி நிறைவடையும்போது, எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதில் எந்த மாற்றமும் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஆராயும் முகமாக நாடாளுமன்றம் கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்துவதன் முக்கியத்துவம் கட்சித் தலைவர்களால் நாடாளுமன்றம் நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவின்போது சுட்டிக்காட்டி இருந்தது.

அதன் பிரகாரம் நாடாளுமன்றம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுவதில் எந்த மாற்றமும் இல்லை.

இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர், விசேட அனுமதியொன்றை பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு 12 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: