நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!
Tuesday, February 20th, 2024ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சட்டவாக்கம் இன்றி நீதித்துறை அல்லது நிறைவேற்று அதிகாரம் இயங்க முடியாது எனவும், இந்த மூன்று தூண்களும் இணைந்தால் நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
கடவத்த மஹாமாயா மகளிர் கல்லூரி மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தைப் பார்க்கும் போது, ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டின் கொடூரமான போக்கைக் காணலாம். ஜனநாயகம் இல்லையென்றால், நாளாந்தம் கொலைகள் நடக்கும் எந்தத் துறையினதும் கட்டுப்பாட்டின்றி இயங்காத நாடும் உருவாகும். அப்போது மக்கள் அந்த நாட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அகதிகளாக வாழ முடிவு செய்வர்.
எனவே, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடுவது தொடர்பான சட்டங்களை இயற்றும் திறன் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இன்று இங்குள்ள பிள்ளைகளில் ஒருவர் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகி நாட்டின் சட்டங்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வாழ்த்துவதாகவும அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|