நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்டபான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Monday, May 11th, 2020

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் நடத்துவற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மீதான விசாரணையே இம்மாதம் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறுமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனிடையே தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் தாம் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

Related posts:


கோவில் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்!
சேதனப் பசளைப் புரட்சி திட்டம் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்பட மாட்டாது - நிதி அமைச்சர் பசில் ராஜபக...
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...