நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது:  வெளியானது தீர்ப்பு!

Thursday, December 13th, 2018

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறித்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலொன்றை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று மாலை வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: