நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

Tuesday, June 5th, 2018

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றையதினம் வழமையான அலுவல்களுக்குப் பின்னர் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவிக்கையில் இந்த வெற்றிடத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்டோரின் பெயர்கள் முன்மொழியப்படுமாயின் வாக்கெடுப்பை நடத்த வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  ஐ.தே.க சார்பில் மொனராகலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஒன்றிணைந்த எதிரணி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாந்து புள்ளே ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று காலை கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

Related posts: