நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு அநாவசியம் – அமைச்சர் சஜித்!
Tuesday, April 24th, 2018மக்களின் பிரதிநிதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை மறுசீரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை மறுசீரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது அநாவசியமானது.
மக்கள் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேயன்றிச் சொகுசு கொண்டாடுவதற்கல்ல.
இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்டால் 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும் என்றார்.
Related posts:
வரவு செலவு திட்டத்தை ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!
யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமை மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் தொடர்பில் செயலமர்வு...
|
|