நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சபாநாயகர் அவசர அழைப்பு!

Saturday, August 14th, 2021

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கே இவ்வாறு முன்கூட்டியே கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தனவின் கோரிக்கையின் பிரகாரமே இவ்வாறு அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: