நாடாளுமன்றத்தை தாக்க திட்டமிட்டதா ஐ.எஸ்? விசாரணையில் வெளியான தகவல்!

நாடாளுமன்றத்தில் குண்டுத்தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட- கிரிமெட்டிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான 6 அனுமதி பத்திரங்கள், 2 குண்டுகள், வரைபடம், 2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
27 வயதான குறித்த இளைஞன் கொழும்பு உணவகம் ஒன்றில் பணி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞளை பலாங்கொட நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று!
2023 ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தை கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
ஈரானில் இருந்து இலங்கைக்கு புற்றுநோய் உட்பட அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி - ஈரானிய தூதுவரால் சுகா...
|
|