நாடாளுமன்றத்தில் வரும் 27ம் திகதி பிணை முறி மோசடி தொடர்பிலான விவாதம்!

Tuesday, January 17th, 2017

 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியிருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27ம் திகதி விவாதம் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட முதலாவது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் ஒர் பண்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் இந்த மோசடியில் தொடர்புபட்டிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

cabinet656565

Related posts: