நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது – ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேரமுகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றையதினம் நாடாளுமன்ற ஆரம்ப நடவடிக்கைகளின் போது 50 நிமிடங்களுக்கு அதிகமான நேரம் செலவிடப்பட்டதாகவும், குறித்த நேரத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் விவாத நேரத்தில் இருந்து குறைக்குமாறும் அவர் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதிமுதல் 28 ஆம் திகதி வரை 552 நிமிடங்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 204 நிமிடங்கள் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலும் உணவு இடைவேளையில் இருந்து 30 நிமிடங்கள் கோரப்படுகிறது எனவும், அதனை வழங்குவதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நேரக்குறைப்பின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு அமைய முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: