நாடாளுமன்றத்திற்குள் குதிரைகள் மட்டுமல்ல கழுதைகளும் வரும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020

தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், குதிரைகள் மாத்திரமல்ல, கழுதைகளும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனால், 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பதிலாக உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஏதேனும் ஒருவகையில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், தற்போதுள்ள நிலைமையே இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மெதகொட அபயதிஸ்ஸ தேரர், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பிரதான பங்கை வகித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன - யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவி...
அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கு...
முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் திட்டம் பெப்ரவரி 01 முதல் ஆரம்பம் - அளவீட்டு அலகுகள்,...