நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி !

Wednesday, October 31st, 2018

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் என அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படும்.

நாடாளுமன்ற கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்பதுடன் சட்டமூலங்களோ வேறு எதுவித நடவடிக்கைகளோ நடக்காது என்பதுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிரதமரை நீக்க முடியாது எனவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அல்லது வரவு செலவுத்திட்டம் அல்லது நிதி சட்டமூலம் ஒன்றை தோற்கடித்து பிரதமரை நீக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்

Related posts:

கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச...
மடு அன்னை தேவாலயத்தினை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார் பிரதம...
பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வ...