நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதா – சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

Wednesday, December 6th, 2023

நாடாளுமன்றத்தின் விதிமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தின் விதிமுறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் நிலையில் தற்போது கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் முடிவடைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பதில் வழங்க வேண்டிய மிக முக்கியமான கேள்விகள் கேட்கப்படும் நிலையில் அவற்றுக்கு பதில் வழங்கப்படாமலேயே நாடாளுமன்றத்தின் காலம் முடிவடையுமானால், முதலில் இருந்து அனைத்தையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்..

இருப்பினும் சபாநாயகரினால் எந்தவொரு பதிலும் வழங்கப்பபடாமல் சபை அமர்வு முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாக காணப்படுகின்ற போதும், ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதனை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

இந்த அடிப்படையிலே, கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: