நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்துகொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயம்!

Monday, November 20th, 2023

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனை இதனை தெரிவித்துள்ளார்.

குழுவின் உறுப்பினர்கள் அல்லது குழு உறுப்பினர்களாக இல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர, குழுவின் தலைவர் மற்றும் வெளி நிறுவன அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார கோப் கூட்டத்தில் பங்குபற்றியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கடந்த வாரம் சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: