நாடளுமன்றம்கலைக்கப்பட்டது!

Tuesday, March 3rd, 2020

2020-03-02 நள்ளிரவுடன் இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவைத் தாங்கி வெளிவந்திருக்கும் அதி விசேட வர்த்தமானி 2165/08 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

  1. இன்று 2020-03-02 நள்ளிரவுடன் இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.
  2. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கூடும்.
  3. ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும்.
  4. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

Related posts: