நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலைமுதல் வேலை நிறுத்தம்!

Tuesday, February 13th, 2024

நாடளாவிய ரீதியில்  72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.2.2024) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன

அந்தவகையில், சுகாதார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பணியாளர்களின் போராட்டம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க...
நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - உபுல் ரோஹன அறிவிப்பு!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித கால...